எங்களைப்பற்றி >>

 
நல்வாழ்த்துக்கள்

‘சினேகிதி’ இணைய இதழ் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பெண் என்பவள் யார், அவள் உடல் சார்ந்த மொழி என்ன என்பன போன்ற கேள்விகளையும் அதற்கான விடைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருபவளே இந்த ‘சினேகிதி’.

இந்த இணைய இதழ் நமக்குள்ளே கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும். நம்மைப் பற்றி நாம் எழுத நமக்கான ஒரு இடம் இந்த இணைய இதழ் மூலம் உருவாகி இருக்கிறது. கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை இப்படி நீங்கள் எழுத விரும்புவது எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்பலாம். தொடர்ந்து வாசிக்கவும் பங்களிக்கவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

சினேகிதியின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள்

நோக்கம்

  • வாழ்க்கைக் கல்வியைப் பற்றியும், உடல் உறுப்புகளைப் பற்றியும் பயிற்சி அளிப்பது.
  • பாலினம் மற்றும் பாலியல் பற்றி எடுத்துரைப்பது.
  • திறமைகளையும், தன்னம்பிக்கையை ஊக்குவிக்க பயிற்சி அளிப்பது.
  • தலைமைத்துவ பண்புகளை வளர்க்க பயிற்சி அளிப்பது.
  • சமுதாய பிரச்னைகளை பற்றியும் அதன் சட்டங்களைப் பற்றியும் எடுத்துக் கூறி, சமூகப் பணியில் ஈடுபட வைப்பது.
  • சுய சார்புடையவர்களாக வளர வழிவகுத்தல் .

செயற்பாடுகள்

மாதாந்திர பயிற்சிகள்

சினேகிதி உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், எல்லா பகுதிகளிலும், குறிப்பாக 13,14,15-வது மண்டல பகுதிகளில் சனிக்கிழமை தோறும் பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் சினேகிதி உறுப்பினர்களுக்குபலதரப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

1. உடலுறுப்பைப் பற்றிய பயிற்சி

இப்பயிற்சியில் அவர்களது உடலுறுப்பை பற்றியும், சுத்தம், சுகாதாரம் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதவிடாய் பற்றிய சந்தேகங்களை தெளிவுப்படுத்துகிறது.

2. வாழ்க்கைக் கல்வி பயிற்சி

வாழ்க்¬க் கல்வி பயிற்சியில் தன்னைபற்றியும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் தன்னுடைய நிறைகுறைகளை அறிந்து கொள்ளவும், பிரச்சனைக்கு தீர்வு காணவும், நல்லவிதமான முடிவுகளை பலதரப்பட்ட சூழல்களில் எடுக்கவும், தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும், குறிக்கோள்களை நல்ல முறையில் செயல்படுத்தவும், நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

3. பாலினம் பற்றிய பயிற்சி

பிறப்பால் சமம், சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேற்றுமை பார்க்கப்படுகிறது. இத்தகைய சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு முன்னேறுவது என்பதைப் பற்றியும், தங்கள் உரிமைகளை இத்தகைய ஆணாதிக்க சமுதாயத்தில் எப்படி போராடி அடைவது போன்ற விழிப்புணர்வு பயிற்சிகளை சினேகிதி உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது.

4. தலை¬த்துவம் பற்றிய பயிற்சி

இந்தப் பயிற்சியின் உதவியால் சமுதாயத்தில் வளரிளம் பெண்கள் ஓர் சிறந்த தலைவியாக, சுயசார்பு முன்னேற்றத்தில் உன்னதமாக வளர வழிவகுத்துத் தரப்படுகிறது. ஒரு சிறந்த தலைவிக்கான பேச்சாற்றல், விழப்புணர்வு, பிரச்சனைக்குத் தீர்வு காணும் குணம், முடிவெடுத்தல், அணுகுமுறை ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.

5. பாரம்பரிய கலைகள்-தப்பாட்ட பயிற்சி

தப்பாட்டம் என்பது சத்தம் போட்டு ஆடும் ஆட்டம், இதில் சில பாடல்களை இசைத்து, அதற்கு ஏற்ப ஆடும் ஆட்டம் தப்பாட்டம். இப்பயிற்சியை சினேகிதி செயற்குழுவில் கற்று கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் மூலம் சினேகிதியின் வளர்ச்சி மிகையோங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தெருநாடகம் போன்றவற்றிலும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

6. சமுதாய முன்னேற்றத்திற்கான பயிற்சிகள்

  • இன்றைய பெண் குழந்தைகள் நாளைய பெண்கள். அதாவது இன்றைக்கு நாம் பெண் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாளை பெண்களின் நிலை அமையப்போகிறது. நாளைய பெண்கள் சுதந்திரமானவர்களாக, சுய சிந்தனையாளர்களாக இருக்க வேண்டுமெனில் இன்றைய பெண் குழந்தைகள் அதன்படி வளர்க்க வேண்டும். இன்றைய பெண் குழந்தைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஓரளவிற்காவது படித்துள்ளனர்.
  • இன்றுள்ள குடிசைப் பகுதியல் உள்ள வளர் இளம் பெண்கள் முதல் தலைமுறை கல்வி கற்பவர்களாக உள்ளனர். அதாவது இவர்களது பெற்றோர்கள் படிக்காதவர்கள். ஆகவே இந்த இளம் பெண்கள் தங்கள் பெற்றோர்கள் போல் இல்லாமல் புதிய வாழ்க்கையை அமைக்க முயல்கின்றனர். அவர்கள் மாற்றத்திற்கு தயாராக உள்ளனர். இவர்களால் தாங்கள் வாழும் சமூகத்தை மாற்ற முடியும்.இவர்களால் ஒரு சமத்துவ சமுதாயத்தைப் படைக்க முடியும். ஆகவே வளர் இளம் பெண்களுக்கு சமூக மாற்ற பணிக்கான கண்ணோட்டம், திறன்கள், அறிவு ஆகியவற்றை அளிக்கும் பயிற்சி நடத்தி வருகிறோம்.
  • வரப்புயர நீர் உயரும் என்பதுபோல இந்த வளர் இளம் பெண்கள் வளர்ந்தாலே இந்த சமூகம் வளர்ந்துவிடும். அதற்காக அவர்களின் வளர்ச்சிக்கான பணிகளை சினேகிதி குழு உறுப்பினர்கள் இணைந்து செயல்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் கணினி பயிற்சி, இசைப் பயிற்சி, போன்றவையும் அளிக்கப்படுகிறது.

இந்த இணைய தளத்தை நடத்துவோர்:

Centre for Women's Development and Research
23.Jayaram Street, 4,Vasanth Apartments 'D'
Kuppam Beach Road, Thiruvanmiyur
Chennai- 600041. Tamil Nadu - India
Website :www.cwdr.org
Phone : 0091-44-24455868
 


 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.