உடல் ஆரோக்கியம்

பருவமடைதல்

பருவமடைதல் என்பது நம் நாட்டை பொறுத்த வரை மிக முக்கியமான, புனிதமான ஓர் நிகழ்ச்சி, ஏழை முதல் பணக்காரர்கள்வரை பல ஆயிரங்கள் செலவழிக்கும் ஓர் நிகழ்ச்சி. பருவமடைதல் என்பது பெண்/ஆண் இருபாலருக்கும் இயற்கையாக நடக்கக்கூடிய ஓர் உடல்ரீதியான மாறுதலாகும். பெண்/ஆண் குழந்தையை பொருத்தவரை பருவமடைதல் என்பது உடல் ரீதியாக அவர்கள் (அதாவது ஒரு ஆணும் ஒரூ பெண்ணும்) உடலுறவு மூலம் குழந்தையை உருவாக்க தகுதிபெற்று விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. குழந்தை பருவத்துக்கும், பருவமடைந்த பருவத்துக்கும் இடைப்பட்ட பருவம் யௌவனப் பருவம் எனப்படும். யௌவனப் பருவம் என்பது பருவமடைதலுடன் தொடங்குகிறது. இப்பருவத்தில் பாலியல் குணங்கள் வெளிப்பட ஆரம்பிக்கிறது. சராசரியாக ஒரு பெண் குழந்தை பருவமடைவதற்கு சில காலங்கள் முன் (அதாவது 11லிருந்து 14 வரை பெண்களும் 14-15 வயதில் ஆண்களும்) உடல் வளர்ச்சியானது, மிக விரைவாக வளர்ச்சி பெறுகிறது. இன உறுப்புகளும் வளர்ந்து பருவமடைகின்றன. பெண்குழந்தைகளுக்கு பொதுவாக 11 வயது 6 முதல் 14 வயதிற்குள் முறையான மாதவிடாய் ஆரம்பமாகிறது. இந்த முதல் மாதவிடாயை தான் நாம் ‘பெண் பூப்பெய்து விட்டாள்’ என்று சடங்குகள் செய்து, விழா எடுக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.


மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் சுழற்சி என்பது உடல் ரீதியான இயற்கையான வளர்ச்சி முறையாகும். இச்சுழற்சி பெண்கள் வயதுக்கு வந்தவுடன் தொடங்குகிறது. இது முறையாகவும், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வருவதனால் இதனை மாதவிடாய் சுழற்சி என்கிறோம். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால், மாதவிடாய் வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு பக்க கருமுட்டைப்பையில் ஒரு முட்டை உருவாகி முதிர்ச்சி அடைகிறது. அது சினை குழாயின் வழியாக வரும்போது கருப்பையை அடைகின்றது. அப்படி அது கருப்பையை அடைந்து உயிரணுவோடு சேரவில்லை என்றால் முக்கிய ஹார்மோனின் காரணமாக கருப்பை சுருங்குகிறது. அப்படி சுருங்கும் போது அதன் உட்சுவரில் உள் தோல் பகுதியாகிய என்டோமெடரியம் சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அவை உதிர்கின்றன. அப்போது அதோடு தொடர்புடைய ரத்த நாளங்களும் துண்டிக்கப்படுவதால் இரத்தமும், கருவுறாத முட்டையும், உட்சுவராகிய சளிச்சவ்வும் வெளியே தள்ளப்படுகின்றது. மாதவிடாய் என்பது 3 முதல் 6 நாட்கள் வரை தொடரும். இது பெண்ணிற்கு பெண் மாறுபடும். இந்த நாட்களில் பெண்கள் சோர்வாகவும், சோம்பலாகவும், கலகலப்பின்றியும் காணப்படுவார்கள். இது இயற்கை, இதற்கு காரணம் உடலில் நிகழும் இரசாயன மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களே ஆகும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பித்த தொடக்க காலத்தில் ஹார்மோன்களின் சுரக்கும் தன்மை மாறுபடும். அதனால் இரத்தப் போக்கும் மாறுபடும். சில சமயங்களில் மாதவிடாய் தள்ளி போகவோ அல்லது அடிக்கடி வரவோ செய்யலாம். ஆனால் இது 16-18 வயதிற்குள் சரியாகிவிடும். அதே பிரச்சனை மாதவிடாய் நிற்கும் பருவத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதவிடாய் சுழற்சி சிலருக்கு 27-28 நாட்களுக்கு ஒரு முறையும் சிலருக்கு 35 நாட்களுக்கு ஒரு முறையும் ஏற்படும். சில சமயங்களில் இச்சுழற்சியில் வித்தியாசம் வர வாய்ப்புள்ளது.

அதற்கும் பல காரணங்கள் உள்ளன அவை

மாதவிடாய் பற்றிய பல மோசமான எண்ணங்கள்தான் இன்று பெண்கள் மத்தியல் நிலவி வருகிறது. மாதவிடாய் ஆன பெண் தீட்டு ஆனவள், அவள் யாரையும் தொடக்கூடாது. தனித்திருக்க வேண்டும். கடவுள் அறை பக்கம் போகக்கூடாது. கோயிலுக்கு போகக்கூடாது, மங்களகரமான செயல்களிலும், வைபவங்களிலும் ஈடுபடக்கூடாது ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று மேற்கூறிய யாவும் தவறான கருத்துக்களே. மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று, அந்த காலகட்டத்தில் பெண் தூய்மையாக இருக்க வேண்டும். நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமே தவிர, மேற்கூறிய தவறான கருத்துக்கள் இல்லை.

மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டியவை

1.தூய்மையாய் இருக்க வேண்டும்
2. எளிதான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்
3. போதுமான அளவு நல்ல சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.
4. தூய்மையான பருத்திதுணி அல்லது நாப்கின் போன்றவற்றை இரத்தப் போக்கை உறிஞ்ச பயன்படுத்த வேண்டும்.
5. துணியை மீண்டும் உபயோகப்படுத்துபவராக இருந்தால் நன்றாக துவைத்து பின் டெட்டால் போட்டு நல்ல வெயிலில் காயவைத்த பின் உபயோகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொற்று கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.
6. இரத்தப்போக்கிற்கு ஏற்ப அணையாடையை அவ்வப்போது மாற்றி கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே துணியையோ அல்லது 8 நாப்கினையோ உபயோகப்படுத்தினால், அதனால் பல தொற்று நோய் ஏற்பட வழி உண்டு.
7. காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்
8. நாப்கின் உபயோகப்படுத்துபவராக இருந்தால் அதை மாற்றும் போது கழிப்பறையில் போடக்கூடாது. அது போய் கழிவு நீர் குழாயை அடைக்க வாய்ப்புள்ளது. எனவே ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியில் போடுவது நல்லது.
9. மாதவிடாயின் போது அடிவயிற்சில் சிலருக்கு வலி வருவது இயற்கை, அதற்கு சூடான நீரை அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்தால் குறைந்து விடும். முதுகு வலி ஏற்பட்டால் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்தால் சரியாகி விடும்.

பால் உணர்வும் திருமண வயதும்

இயல்பாகவே பெண், ஆணைவிட உடல் வளர்ச்சியில் சற்றுக் குறைவாகவே இருப்பாள். ஆனால், பருவ மலர்ச்சி அதாவது வயதுக்கு வருவது என்பது ஆணைவிடப் பெண்ணுக்கே முதலில் நிகழும். தமிழ்நாட்டுப் பெண்கள் சுமார் 12-15 வயதில் பூப்பு எய்துவர். இந்நிலையில் இவர்கள் உடல் வளர்ச்சி இதே வயதுடைய ஆண்களைவிட மிகுதியாக இருக்கும். ஆண்பிள்ளைகள் சுமார் 1820 வயதில் பருவம் எய்துவார்கள். பின்னர் ஒரு ஆண், பெண்ணை விட வளர்ச்சியுறுவான். பால் உணர்விலும் இந்த மாறுபாடுகள் உண்டு. பெண்கள் பால் உணர்வு 12-15 வயதில் மெதுவாகத் தொடங்கி 20-35 வயதில் நிறைந்த உணர்வோடு இயங்கி பின் 45 வயதுக்குப் பின் சற்றே குறையும். பிறகு மாதவிடாய் நிற்கும்வரை மெதுவாகக் குறைந்து அது நின்றதும் மிக வேமாகக் குறைந்துவிடும். பால் உணர்வு ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்கள் இனவளர்ச்சி சூழ்நிலை, தட்பவெப்பநிலை, நாகரிகம் இவற்றிற்கேற்ப மாறுபடும். 18 வயதிற்கு முன் பெண்ணின் பால் உறுப்புகள் வளர்ச்சியுற்றிருந்தாலும் அவள் அடிப்படைக் கல்வி பயில வேண்டிய காலம் அது. பொறுப்புணர்ச்சியும் பெற்றிருக்கமாட்டாள். எனவே 21 வயதிற்குப்பின் ஒரு பக்குவத்தை, ஒரு பொறுப்பை, ஒரு நிறைவை அவள் எய்துகிறாள். எனவே 21 வயதுக்கு மேல்தான் அவள்.

‘தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொற்காத்துச் சோரவிலான் பெண்’ - ஆகிறாள்.

குறிப்பாக ஒரு பெண் தங்கள் கருத்து மனப்போக்கு முதலியவற்றில் ஒரு பிடிவாத குணத்தை (ஸிவீரீவீபீவீtஹ்) விட்டு நாணல் போல் வளைந்து கொடுத்து (திறீமீஜ்வீதீவீறீவீtஹ்) புதிய உறவோடு பழகும் வாய்ப்புகள் அதிகம். கல்விக் கூடங்கள், காரியாலங்கள், சிற்றுண்டி, கடற்கரை, ஆற்றுப்படுக்கை, சுற்றுப் பயணங்கள் இவற்றில் இவர்கள் பால் உணர்வு தூண்டப்பெறும் சூழ்நிலைகள் பலப்பல. இக்கால கட்டத்தில் பெற்றோர் விதித்த கட்டுப்பாடுகளும் சமூகக் கட்டுப்பாடுகளும், பின் தங்கும் பால் உணர்வு வேகம் மிகும். பகுத்தறிவு ஒதுங்கும். விளைவு எப்பொழுதும் சுபம் அல்ல. கோழை மனமோ அல்லது கொடிய மனமோ உடைய ஆண்களால் கன்னி தாயாகலாம். குழந்தை அநாதையாகி அரசுத் தொட்டில்களை நிரப்பலாம். இல்லை மனம் ஒன்றி இருமனங்களும் மரணததை அணைக்கலாம். திருந்தாத சமுதாயத்தில் வாழ்கிற சூழ்நிலையைக் காதலர்கள் இருவரும் பூரணமாக உணரவேண்டும்.

விடியலில் விலாசங்களை
படிக்கல்லாய் மாற்றி
இருட்டிலே மறைக்காமல்
பாதை வகுக்க வேண்டும்.

மனம் விட்டுப் பழகினாலும் மாசுபடாது கட்டுப்பாட்டோடும், பொறுப்புணர்ச்சியோடும் செயல்படவேண்டும்.

ஹார்மோன் என்றால் என்ன?

ஹார்மோன் என்றால் இரத்தத்தில் கலந்து உடலுறுப்புகளை ஊக்குவிக்கின்ற (செயல்படுத்துகின்ற) உட்சுரப்பி

விடலைப் பருவத்திற்கு முன்பு பெண்கள் சற்று பெருத்து காணப்படுகின்றனரே ஏன்?

பெண்கள் பூப்பெய்ய தொடங்குதலுக்கு முன் நிறைய பெண்களின் உடல் சுற்று பெருத்து காணப்படுகிறது. இதற்கு (றிuஜீஜீஹ் திணீt) அதாவது இளம் கொழுப்பு என்று பெயர். இந்த இளம் கொழுப்பு பெண்களுக்கு அவசியமான ஒன்று. ஏனெனில் இதுவே மூளைக்கு தெரிவிக்கும் ஒரு அறிகுறி (ஒரு பெண் விடலைப்பருவத்திற்கு தயாராகிவிட்டாள் என்ற அறிகுறி)

ஒல்லியான பெண்களுக்கு இந்த அறிகுறி தெரியாததினாலும், அவர்கள் வயது வரும் காலம் தாமதமாகிறது. துரித வளர்ச்சியடையும் பெண்களுக்கு இளம் கொழுப்பு மறையத் தொடங்குகிறது. அதே நேரத்தில் 15 முதல் 16 வயதிலிருந்து இந்த இளம் கொழுப்பு குறைந்து, வழக்கமான குண்டாகும் தன்மை ஏற்படுகிறது.

முதல் மாற்றம் விடலைப்பருதினருக்கு எப்போது நாம் காணமுடிகிறது?

ஒரு பெண் வளரத் தொடங்கும்போது, அவள் மெலிந்த உடலுடனும், நீண்ட கால்களுடனும் காணப்படுகிறாள். எவ்வளவுதான் உண்டாலும், உண்ணவில்லையெனிலும் வளர்ச்சி தடைபடுதில்லை. இந்த வளர்ச்சி ஹார்மோன்களால் மட்டுப்படுத்தப்படுகிறது. ஆண் ஹார்மோனின் பெயர் ஆன்ட்ரோஜன். இதில் என்ன ஒரு விந்தையான விஷயமெனில் எவ்வளவு சீக்கிரம் ஹார்மோன்களின் வளர்ச்சி துரிதமாக நடைபெறுகிறதோ அதேபோல் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஹார்மோன்களின் வளர்ச்சி மட்டுப் படுத்தப்படுகிறது. அதாவது ஒரு சில பெண்கள் வேமாக வளர்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதில் வளர்ச்சி நின்றுவிடுகிறது. அதேபோல், மெதுவான வளர்ச்சியுடைய பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயதில் உயரமான வளர்ச்சி அடைகின்றனர். எனவே வளர்ச்சி என்பது ஹார்மோன்களின் வளர்ச்சியை குறிக்கிறது.

நம்மாள் காண முடியாத மாற்றம் உண்டா?

ஆம் நம்மால் காண முடியாத மாற்றங்கள் நம் உடலின் உட்பகுதியில் நடைபெறுகின்றன. கருப்பை சிசுத்திரை கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன.

கருப்பை என்றால் என்ன?

பேரிக்காயின் வடிவிலான பை பெண்ணின் அடிவயிற்றின் உட்பகுதியில், அமைந்திருக்கும், மென்மையான தசையிலான ஒரு பையே கருப்பையாகும். குழந்தை பிறப்பதறகு முன் இப்பையிலேயே வளர்கிறது. குழந்தை பிறக்கப்போகிறது என்றால் இந்த மென்மையான தசைகள் சுருங்கி, கருப்பையின் வாய் வழியே குழந்தையை வெளியேத் தள்ளுகிறது. அதாவது கருப்பையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள சிசுத்திரையின் உள்பகுதிக்கு (சிமீக்ஷீஸ்வீஜ்) தள்ளுகிறது. இதில் நம்முடைய தூய்மையான ஒரு விரலை சிசுத்தாரையினுள் விடும்போது. (கூம்பு வடிவிலான கடினமாகவும் தசைப்பற்றுள்ள ஒரு பகுதியையும் உணரமுடியும்).

சிசுத்தாரை என்றால் என்ன?

பெண் குறியில் அமைந்துள்ள திறப்பே சிசுத்தாரை (க்ஷிணீரீவீஸீணீ) எனப்படும். கருப்பையின் அடிப்பகுதியிலிருந்து பெண்குறி மேடுவரை இந்த குழாய் நீண்டுள்ளது. பிரவத்தின் போது குழந்தை இவ்வழியாகவே வெளி வருகிறது. இவ்வழியில் தான் மாதவிடாய் இரத்தமும் வெளிவருகிறது. உடலுறவின் போது ஆண் குறி நுழைவதும் இவ்வழியேதான்.

கருமுட்டை என்றால் என்ன?

ஒவ்வொரு பெண்ணும் இரண்டு கருமுட்டை பைகள் உள்ளடக்கியுள்ளனர். இரண்டும் கருப்பையின் இரு பக்கங்களிலும் இணைந்துள்ளன. இக்கரு முட்டைப் பைகள் கருமுட்டையை உற்பத்தி செய்கின்றன. கருமுட்டைகள், விந்துவுடன் இணையும்போது குழந்தை உருவாகிறது இக்கருமுட்டைப் பைகள் விடலைப் பருவத்தின் முடிவில் ஒவ்வொரு மாதமும், ஒரு வளர்ந்த கருமுட்டையும் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவையை கரு அடையும்போது, ஒரு ஆணின் வளமான விந்துவினால் உட்கவரப்பட்டு, குழந்தை பிறக்க ஏதுவாக அமைகிறது.

என் உடல் என்னுடையதா?

வீடு என்பது பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இன்று வன்முறைகளமாகும் பொழுது என்ன செய்வது. அப்பாவும், அண்ணணும் தம்பியும் நெருங்கின உறவினர்களும் பெண்ணுக்கு பாதுகாப்பை தர வேண்டியவர்கள் என்று கருதப்படுகிறவர்கள். ஆனால், அவர்களாலேயே ஆபத்து வர நேர்ந்தால் பெண் இதை எப்படி எதிர்கொள்வாள்? பாலுறவு என்பது இருமணங்களின் ஆரோக்கியமான உறவின் நிகழ்வு, சம்பந்தப்பட்ட இருவரும் இணைந்து உடலாலும், மனதாலும் ஒன்றுபடுவது. ஆனால் பாலுணர்வு இச்சையை அறியாத வயதில், ஒரு பெண்ணின் மேல் இது வன்முறையாக திணிக்கப்பட்டால் அந்த பெண் உடல் ரீதியான பாதிப்பை மட்டுமல்ல, மனரீதியாகவும் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுகிறாள். சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் பின்னாளில் மணவாழ்வில் பாலுணர்வு இன்பமானது என்று அணுகாமல் பெரும் பயத்துடனேயே எதிர்கொள்கிறாள். திருமணம், காதல், உறவு, ஆண் பெண் நட்பு என எல்லா உறவுகளுமே அவளுக்கு அருவெறுப்பையும் பயத்தையும் தருகிறது. இறுதியில் செக்ஸ் பற்றிய பயமும், வெறுப்புணர்சியுமே மிஞ்சுகிறது. அறிமுகம் இல்லா ஆண்களின் வன்முறை தரும் பாதிப்பை விட இது பலமடங்கு அதிகமானது. வீட்டில் தினம் பழகிய ஆண் உறவினர்களால் வன்முறை நிகழ்த்தப்படும்பொழுது வன்முறையால் பாதிக்கப்படும் பெண் வாழ்க்கையில் உறவுகள் பற்றிய நம்பிக்கையே இழந்து போகிறாள். தன்மீதே அவளுக்கு வெறுப்பும், உடல் சார்ந்த அருவெறுப்பும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட வருடகணக்காகிறது. சிலர் இந்த உணர்வுகளிலிருந்து விடுபடாமலேயே வாழ்க்கை முழுவதும் மன உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். இவர்களுடைய பாலுறவு வாழ்க்கையும் சிக்கலுக்கு உள்ளாகிறது. இப்பொழுது தான் இதுபற்றி பெண்கள் ஓரளவுக்கு வெளியே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ கவுன்சிலிங்குக்கும் போகத் துவங்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் மனத்திற்குள் வைத்து புழுங்குவதைவிட, அம்மாவிடம் பேசலாம், வயதில் பெரிய பெண்களான அக்கா, அத்தை, ஆசிரியை, டாக்டர்.. இவர்களோடு பேசலாம் வாழ்க்கை வாழவேண்டும் என்ற சலிப்போடில்லாமல், தெளிவாக, திடத்தோடு வாழ்வு பற்றி நம்பிக்கையுடன் வாழ்தல் மிக முக்கியம். வாழ்க்கை எதோனோடும் முடிந்து விடுவதில்லை. அது தொடர்கிறது. உன் உடல் உன்னுடையது தான். உன் அனுமதி இன்றி எவரும் தொடவோ, சொந்தம் கொண்டாடவோ உடலுறவு கொள்ளவோ முடியாது.

வளரிளம் பெண்களுக்கென வாழ்க்கை திறன்கள். ?

வளரிளம் பெண்கள் தங்களுடைய வயதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து, நல்ல பழக்கவழக்கங்களை அறிந்து, அதில் சரியானதைத் தேர்வு செய்து கடைபிடித்திடும் திறனை வாழ்க்கைத் திறன் என்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, வாழ்க்கைத்திறன் என்பது கீழ்குறிப்பிட்ட திறன்கள் அடங்கியது ஆகும்.

மேற்குறிப்பிட்ட வாழ்க்கைத் திறனை வளரிளம் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வளரிளம் பெண்களிடையே மேற்குறிப்பிட்ட திறன்கள் இல்லாமல் இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் இத்திறன்களை முழுமையாக வளர்த்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிகளை அவசியம் மேற்கொள்ளவேண்டும். சினேகிதியில் உறுப்பினராக சேரவேண்டும். உடல் ஆரோக்கியமும் பாலுறுப்புகளின் சுத்தமும் நாம் நம் உடலை தினமும் சுத்தமாக வைத்திருக்கிறோம், என்றால் நம் உடலை நல்ல முறையில பராமரிக்கின்றோம் என்று பொருள். அதனால் நம் உடல் பல நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுகிறது. தினசரி குளிப்பது, பல் துலக்குவது, தூய்மையான ஆடைகளை அணிவது அதேபோல்தான் பாலுறுப்புகளின் சுத்தமும், அவற்றை தினமும் கவனம் செலுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று கிருமிகள் சூழ்ந்து பல நோய்களை உருவாக்கும் நிலை ஏற்படும். இயற்கையாகவே பாலுறப்புகளில் சுரக்கும் திரவம் அவ்வுறுப்புகளை தூய்மை செய்து வருகிறது. இந்த திரவம் பெண்ணுறுப்பின் உள் இருக்கும்வரைதான் அது நோய்கிருமிகளை எதிர்த்து அப்பகுதிகளை தூய்மையாக வைக்கிறது. இது பெண்ணுறுப்பின் வெளிபுறத்தில் வரும்போது அதுவே நமக்கு தீமையை விளைவிக்கும். அதற்கு வெளிச்சூழல்தான் காரணம். வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்களின் தாக்குதலால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. நாம் மிக கவனமுடன் அப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக பேண வேண்டும். ஒவ்வொரு முறை நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும்போது, அப்பகுதிகளை மிகவும் நன்றாக தூய்மை செய்ய வேண்டும். ஏனென்றால், நம் உடலிலிருந்து வரும் கழிவுகளில் ஏராளமான நுண்கிருமிகளும் வெளிவரும். அவை அப்பகுதிகளில் தங்கிவிடக்கூடும். பாலுறுப்புகளை தூய்மை செய்ய நாம் அன்றாடம் உடம்பிற்கு பயன்படுத்தும் சோப்பே போதும். ஏதாவது அரிப்பு ஏற்பட்டால் டெட்டால் உபயோகப்படுத்தாலம். டெட்டால் ஓர் கிருமிநாசினியாக பயன்படுகிறது. இது தவிர, லோஷன் அல்லது ரசாயான பொருட்கள் உபயோகிப்பது

உடல் ஆரோக்கியமும் பாலுறுப்புகளின் சுத்தமும்

நாம் நம் உடலை தினமும் சுத்தமாக வைத்திருக்கிறோம், என்றால் நம் உடலை நல்ல முறையில பராமரிக்கின்றோம் என்று பொருள். அதனால் நம் உடல் பல நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுகிறது. தினசரி குளிப்பது, பல் துலக்குவது, தூய்மையான ஆடைகளை அணிவது அதேபோல்தான் பாலுறுப்புகளின் சுத்தமும், அவற்றை தினமும் கவனம் செலுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று கிருமிகள் சூழ்ந்து பல நோய்களை உருவாக்கும் நிலை ஏற்படும். இயற்கையாகவே பாலுறப்புகளில் சுரக்கும் திரவம் அவ்வுறுப்புகளை தூய்மை செய்து வருகிறது. இந்த திரவம் பெண்ணுறுப்பின் உள் இருக்கும்வரைதான் அது நோய்கிருமிகளை எதிர்த்து அப்பகுதிகளை தூய்மையாக வைக்கிறது. இது பெண்ணுறுப்பின் வெளிபுறத்தில் வரும்போது அதுவே நமக்கு தீமையை விளைவிக்கும். அதற்கு வெளிச்சூழல்தான் காரணம்.

வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்களின் தாக்குதலால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. நாம் மிக கவனமுடன் அப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக பேண வேண்டும்.

ஒவ்வொரு முறை நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும்போது, அப்பகுதிகளை மிகவும் நன்றாக தூய்மை செய்ய வேண்டும். ஏனென்றால், நம் உடலிலிருந்து வரும் கழிவுகளில் ஏராளமான நுண்கிருமிகளும் வெளிவரும். அவை அப்பகுதிகளில் தங்கிவிடக்கூடும். பாலுறுப்புகளை தூய்மை செய்ய நாம் அன்றாடம் உடம்பிற்கு பயன்படுத்தும் சோப்பே போதும். ஏதாவது அரிப்பு ஏற்பட்டால் டெட்டால் உபயோகப்படுத்தாலம். டெட்டால் ஓர் கிருமிநாசினியாக பயன்படுகிறது.

இது தவிர, லோஷன் அல்லது ரசாயான பொருட்கள் உபயோகிப்பது என்பது டாக்டரின் அறிவுரை கேட்டபின்பு உபயோகப்படுத்த வேண்டும். டாக்டரின் ஆலோசானை இன்றி பயன்படுத்தினால், கொப்புளங்கள், புண்கள், அரிப்பு போன்றவை வர வாய்ப்புள்ளது. பாலுறுப்புக்களை சுத்தமாக பராமரிக்கும் போது மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் மிகவும தூய்மையுடன் உடலை பராமரிக்க வேண்டும். ஏனென்றால், பல தொற்று கிருமிகள் பாலுறுப்புகளை தாக்க நேரிடும். தினமும் குளித்து அவ்வப்போது நாப்கின் அல்லது துணியை மாற்றி சுத்தமான மாற்று துணியினை வைக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் டெட்டால் நீரில் கலந்து அப்பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் வேலை செய்வது உடலுக்கும் மனதுக்கும் தெம்பை கொடுக்கும். உள்ளாடைகளை நன்றாக துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து உடபோயப்படுத்துவது நல்லது. பொதுவாக மற்றவர்களின் உள்ளாடைகளை ஒருபோதும் அணியக்கூடாது. பருத்தி துணியினால் ஆன உள்ளாடைகளை உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால், வியர்வையினால் வரக்கூடியத்தொற்று நோயை அது தடுக்கும். 
 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.