கேள்வி பதில் >>

 


 
இப்பகுதியில் பெண் சம்பந்தப்பட்ட எந்தக் கேள்வியானாலும் நீங்கள் கேட்கலாம். சில சாம்பிள் கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இங்கே தரப்படுகின்றன.

ஹார்மோன் என்றால் என்ன?
ஹார்மோன் என்றால் இரத்தத்தில் கலந்து உடலுறுப்புகளை ஊக்குவிக்கின்ற (செயல்படுதுகின்ற) உட்சுரப்பி.

நம்முடைய மாதவிடாய் சுழற்சி முறையற்றதாக
உள்ளபோது என்ன செய்ய வேண்டும்?

முதல் வருடம் இவை முறையற்றதாக இருப்பது இயல்பான நிகழ்ச்சியே. தொடர்ந்து இருக்குமானால் மருத்துவரைக் கட்டாயமாக அணுக வேண்டும். மாதவிடாய் சம்பந்தமான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மாதவிடாய் வந்த பிறகும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும் (மாதவிடாயின்போது இல்லை)

இம்மாத்திரையின் உதவியினால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காகும்போது இவற்றைத் தவிர்த்து விடலாம். இம்மாத்திரைகளை உட்கொள்வதால் வளர்ச்சி பாதிக்கப்படாது. கடினமான நேரங்களில் அதாவது கடினமான வேலைகள் செய்வதாலும் மாதவிடாய் சீக்கிரமாகவோ அல்லது ஒழுங்கற்றதாக மாறிவிடும் வாய்ப்புண்டு. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

கருப்பை என்றால் என்ன?
பேரிக்காயின் வடிவிலான, பெண்ணின் அடிவயிற்றின் உட்பகுதியில் அமைந்திருக்கும் மென்மையான தசையாலான ஒரு பையே கருப்பையாகும். குழந்தை இப்பையில் வளர்கிறது. குழந்தை பிறக்கப் போகிறது என்றால் இந்த மென்மையான தசைகள் சுருங்கி கருப்பையின் வாய் வழியே குழந்தையை வெளியே தள்ளுகிறது. அதாவது கருப்பையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள சிசுத்தாரையின் உள்பகுதிக்கு (Cervix) தள்ளுகிறது.
 

 
பெயர் :

மின் அஞ்சல் :

உங்கள் கேள்வி:


 
 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.