பூத்தல்

சிறுமியில் ஆரம்பித்த போது
அதற்குள்ளேயா? என அம்மாவின் பதட்டம்
அடுத்தடுத்த மாதங்களில்
இன்னும் வரவில்லையா?
ஆணியறைந்து மாட்டப்பட்ட
நாட்காட்டி என் முகத்தில்.
மாமியாரின் ஆதங்கமோ இன்னும் வருதா? என
இடம் மாற்றி ஏற்படுத்தும்
புதிய துளைகளை. தனியாய்ப் போனால் பிடிக்கும் முனி
தலை குளியாதிருந்தால் அடையும் தேள்கள்
என்று நீளும் கதைகளில்
குத்திக் கோர்த்தெடுக்கப்பட்ட என் தினங்கள்.
காட்டுத்தீ மரமோ
பருவங்களைக் கவனியாது
பூத்துத் தள்ளுகிறது அது போக்கில்
வார்த்தைத் தீ
பொசுக்கும் எனத் தெரிந்தும்
பூக்கும் பிடிவாதப் பூக்கள்
மஞ்சளில் ஆரம்பித்து,
ஆரஞ்சில் ஆழ்ந்து
குருதிச் சிவப்பிற்கே திரும்புகிறது
உபயோகித்த சானிடரி நாப்பின்களைக்
கொளுத்திய தீ. - உமா மகேஸ்வரி


பெண்

நான் ஒரு பெண்
நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள்
காலோடு கால் சேர்த்து நிற்கும்
என்னைப் பாருங்கள்.
நிலப்பரப்பை என் அன்புக் கரங்களால் அரவணைக்கிறேன், ஆயினும், இன்னும் நான் ஒரு கருவே (சிறுமுளையே)
என் சகோதரன் என்னைப் புரிந்துகொள்ளும் வரையில் இன்னும் நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டும்
நான் விதை
நான் செய்ய வேண்டுமென்றால்
எதையும் என்னால் செய்ய முடியும்
நான் வலுவானவள்
நான் வெல்லப்பட முடியாதவள்
நான் ஒரு பெண் என்பதை உலகிற்கு நிருபிக்க வேண்டும்.

அம்மா சொல்கிறாள்
என்ன பெண் இவள்
என்ற அங்கலாய்ப்புடன்
ஆரவராமாய் விடிகிறது
என் ஒவ்வொரு காலையும்!
தலைக்கு மேல் வளர்ந்த பின்னும்,
தலைவாரத் தெரிவில்லை என்று
கடுகடுத்தால் போதும்; தன்
இடுப்பளவுக் கூந்தலை
இரண்டே கால் அங்குலமாய்க்
கத்தரித்துவிடுவேன் என்றே
கலவரப்படுதுதுகிறாள் என்னை!

வெந்நீர்கூட வைக்கத்
தெரியவில்லையென
வேகமாய்ச் சாடினால்,
சமையற்கலை படித்தவனை மண முடிப்பேன் என்று

சற்றும் பதற்றமின்றி,
சாவகாசமாய்ச் சொல்கிறாள்!
வாசல் தெளித்து, கோலமிடத்
தெரியவில்லையே உனக்கு என்றால்,
அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வாசற்கோலம் எதற்கு என்கிறாள்!
எதிர்பேச்சு பேசாதே என்றால்
ஏனம்மா பேசக்கூடாது என்று
எதிர்கேள்வி கேட்கிறாள்!

கொந்தளிக்கும் கோபத்தோட
ு நீ என் அம்மாவிடம் வளர்ந்திருக்க வேண்டும்,
அப்போது தெரிய வந்திருக்கும்
அத்தனைக் கலைகளும் என்றாள்
அவள் கன்னத்தில் முத்தமிட்டு
புள்ளி மானாய் குதித்து
இளமை பொங்க சிரிக்கிறேன் நான்
 
 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.