உடல் நலன் >>

 
உங்கள் உடல் நலம், உங்கள் உடம்பு, உங்கள் அறிவு, உங்கள் சக்தி. பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி

ஹலோ! என் பெயர் ரமா. நான் ஒரு இளம் பெண். நான் இங்கு உங்களுடன் உங்கள் உடல் நலத்தையும், உடம்பையும் பற்றி பேசப் போகிறேன். 

இது சோர்வு அளிக்கக் கூடியதாக இருக்கப் போகிறதா? இல்லை. இங்கு நீங்கள் வெறும் வார்த்தைகளை படிக்க வேண்டியதில்லை. இதில் உங்களை உற்சாக படுத்தும் வகையில் படங்களும், புகைப்படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகள் நீங்கள் மேலும் அதிகப்படியாக விசயங்களை தெரிந்துக் கொள்வதற்கு உதவும்.

சந்தேகங்கள் பற்றி:

நாம் பேசப் போகிற முதல் விசயம் பெண்ணாக இருக்கும் அனுபவம் மற்றும் வளர்ச்சி பற்றியதாகும். இது ஒரு முக்கியமானதும், உற்சாகமளிக்கக் கூடியதுமன தலைப்பாகும்,  ஏனென்றால் நம்முடைய உடல் நலம், நம் உடம்பு, நாம் வளரும் போது நமக்கு ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி உண்மையாகவே நாம் அறிய வேண்டியுள்ளது.  அதனால் அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.

பகுதி 1 - நம் உடம்பு

பெண்ணாக இருப்பதென்பது அற்புதமானது. ஆனால் சில சமயங்களில் அதுவே கடினமானதும் கூட. நாம் நிறைய விசயங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டு நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொண்டு வளர வேண்டும். பயமளிக்கக் கூடியதும், மாறுபட்டதாகவும் தோன்றும் பல உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களுக்கு நாம் ஆட்படுகிறோம். அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்துக் கொண்டவுடன் அவைகள் அற்புதமானவையாகத் தோன்றும். ஏனென்றால் இவைகள் பெண்ணாக இருப்பது மிகவும் தனித்தன்மையானது என்பதை நாம் உணர வைக்கும். நம்முடைய உடம்பையும், மனத்தையும், நம்மை பற்றியும் அறிந்துக் கொள்வதானது நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதை எளிதாக்கும். நாம் நம்மை பற்றி நன்றாக தெரிந்துக் கொண்டால் நாம் ஏராளமான நோய்களையும், தப்பெண்ணங்களையும் தடுக்க முடியும். அறிவு பலம் பொருந்தியது. வளரும் போது நீங்கள் அனுபவிக்கும் மாற்றங்கள் பற்றி படித்தப் பிறகு நீங்கள் இன்னும் அதிக சக்தி வாய்ந்த்தவர்களாக இருப்பீர்கள்.

உங்கள் சிந்தனைக்கு ஓரு கேள்வி:

பொதுவாக, நமக்கு ஏதாவது நோயென்றாலோ அல்லது உடல் நலக் குறைவாக இருந்தாலோ முதலில் அதை தெரிந்து கொள்வது யார்? நாமா அல்லது மற்றவர்களா? ஆம், நாம்தான் முதலில் அறிந்துக் கொள்பவர்கள். நாம் நலமடைவதற்காக மருத்துவர்களின் அறிவுரையை நாடலாம். ஆனால் நமக்கு ஏதோ உடல் நலக் குறைவுள்ளது என்பதை முதலில் அறிந்துக் கொள்பவர்கள் நாமே. நாம் நம்முடைய உடம்பை பற்றி முழுமையாக அறியாத நேரங்களில் மட்டுமே நாம் நம்முடைய நோயை குறித்து அறியாமல் போகலாம். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு நாம் நம்முடைய உடம்பை பற்றி தெரிந்து கொள்வோமாக. இதன் மூலம் உடல் நலத்துடன் இருப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நமது உடல் நிலையில் ஏதாவது தவறாக சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளவோ அல்லது நம்முடைய உடம்பை நல்ல இயங்கு நிலையில் வைத்துக் கொள்வதற்கோ, நாம் கண்டிப்பாக நம்முடைய உடல் நலத்தையும், உடம்பு வேலை செய்யும் விதத்தையும் பற்றித் தெரிந்துக் கொள்ளவேண்டும். ஒரு நிமிடத்தை எடுத்துக் கொண்டு ஒரு பெண்ணின் உடம்பை வரைந்து, உடல் உறுப்புகளின் பெயர்களை எழுதுங்கள். உண்மையாகவே நீங்கள் உங்கள் உடம்பின் எல்லாப் பகுதிகளையும் குறிப்பிட்டுள்ளீர்களா?

உடல் ஆரோக்கியமும் பாலுறுப்புகளின் சுத்தமும்

நாம் நம் உடலை தினமும் சுத்தமாக வைத்திருக்கிறோம், என்றால் நம் உடலை நல்ல முறையில பராமரிக்கின்றோம் என்று பொருள். அதனால் நம் உடல் பல நோய்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுகிறது. தினசரி குளிப்பது, பல் துலக்குவது, தூய்மையான ஆடைகளை அணிவது அதேபோல்தான் பாலுறுப்புகளின் சுத்தமும், அவற்றை தினமும் கவனம் செலுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று கிருமிகள் சூழ்ந்து பல நோய்களை உருவாக்கும் நிலை ஏற்படும். இயற்கையாகவே பாலுறப்புகளில் சுரக்கும் திரவம் அவ்வுறுப்புகளை தூய்மை செய்து வருகிறது. இந்த திரவம் பெண்ணுறுப்பின் உள் இருக்கும்வரைதான் அது நோய்கிருமிகளை எதிர்த்து அப்பகுதிகளை தூய்மையாக வைக்கிறது. இது பெண்ணுறுப்பின் வெளிபுறத்தில் வரும்போது அதுவே நமக்கு தீமையை விளைவிக்கும். அதற்கு வெளிச்சூழல்தான் காரணம்.

வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்களின் தாக்குதலால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. நாம் மிக கவனமுடன் அப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக பேண வேண்டும்.

ஒவ்வொரு முறை நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும்போது, அப்பகுதிகளை மிகவும் நன்றாக தூய்மை செய்ய வேண்டும். ஏனென்றால், நம் உடலிலிருந்து வரும் கழிவுகளில் ஏராளமான நுண்கிருமிகளும் வெளிவரும். அவை அப்பகுதிகளில் தங்கிவிடக்கூடும். பாலுறுப்புகளை தூய்மை செய்ய நாம் அன்றாடம் உடம்பிற்கு பயன்படுத்தும் சோப்பே போதும். ஏதாவது அரிப்பு ஏற்பட்டால் டெட்டால் உபயோகப்படுத்தாலம். டெட்டால் ஓர் கிருமிநாசினியாக பயன்படுகிறது. இது தவிர, லோஷன் அல்லது ரசாயான பொருட்கள் உபயோகிப்பது என்பது டாக்டரின் அறிவுரை கேட்டபின்பு உபயோகப்படுத்த வேண்டும். டாக்டரின் ஆலோசானை இன்றி பயன்படுத்தினால், கொப்புளங்கள், புண்கள், அரிப்பு போன்றவை வர வாய்ப்புள்ளது. பாலுறுப்புக்களை சுத்தமாக பராமரிக்கும் போது மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் மிகவும தூய்மையுடன் உடலை பராமரிக்க வேண்டும். ஏனென்றால், பல தொற்று கிருமிகள் பாலுறுப்புகளை தாக்க நேரிடும். தினமும் குளித்து அவ்வப்போது நாப்கின் அல்லது துணியை மாற்றி சுத்தமான மாற்று துணியினை வைக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் டெட்டால் நீரில் கலந்து அப்பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் வேலை செய்வது உடலுக்கும் மனதுக்கும் தெம்பை கொடுக்கும். உள்ளாடைகளை நன்றாக துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து உடபோயப்படுத்துவது நல்லது. பொதுவாக மற்றவர்களின் உள்ளாடைகளை ஒருபோதும் அணியக்கூடாது. பருத்தி துணியினால் ஆன உள்ளாடைகளை உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால், வியர்வையினால் வரக்கூடியத்தொற்று நோயை அது தடுக்கும்.

பெண் இனப்பெருக்க உறுப்புகள்

பெண்ணின் இனவிருத்தி உறுப்புகள் என்றால், தன் சந்ததியினரை உருவாக்கக்கூடிய உறுப்புகள் என்று பொருள். பெண்ணால் தன் வயிற்றில் ஓர் குழந்தையை சுமந்து பெற்று எடுக்க முடியும். அப்படி தாய்மை, தாய், அன்னை, அம்மா என்று ஓர் பெண் அடைய இன உறுப்புகளே. காரணமாககும் இந்த இனப்பெருக்க உறுப்புகள் பெண்ணின் உட்புறத்திலும். வெளிப்புறத்திலும் அமைய பெற்றுள்ளன. பெண்ணின் முக்கியமான இன உறுப்புகள்.
1. சினைப்பை
2. சினைக்குழாய்
3. கருப்பை
4. பெண் பிறப்புறுப்பு

இவை மூன்று முக்கிய வழிகளில் செயல்படுகிறது.
1. முதலாவதாக, இரண்டு உற்பத்திப் பகுதிகளான சினைப்பை, முட்டைகளை தன்னுள் கொண்டிருப்பதோடு அந்த முட்டைகளை மாதத்திற்கு ஒன்றாக முதிர்வடையச் செய்கின்றது.
2. இரண்டாவதாக, கருப்பை ஒரு பாதுகாப்பான போஷாக்கு நிறைந்த அறை. அது முதிர்வடைந்த முட்டையைப் பாதுகாத்து, கருவுறுதலுக்கு துணை செய்து குழைந்தையின் முழுமையான வளர்ச்சிக்கும் துணை செய்கிறது.
3. மூன்றாவதாக, இரண்டு சினைக்குழாயும் (பெலோப்பியன் டியூப்) பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையையும் இதனோடு இணைந்துள்ளது.

மேற்கூறிய யாவும் ஆணின் உயிரணுக்கள் பெண்ணணுறுப்பினுள் சென்று, அது கருப்பையை அடைந்து கரு உருவாகிறது. பெண்ணின் பிறப்புறுப்பு, குழந்தை வெளிவரும் பாதையாக அமைகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு முதிர்வடைந்த முட்டை, முட்டைத் தூம்புகள் வழியாக சினைக்குழாயினுள் தள்ளப்படுகிறது. இது ஒரு மாதத்தில் வலப்புறமும் அடுத்த மாதத்தில் இடது புறத்திலும் நிகழ்கிறது.

கருப்பையின் உள்ளே சளி போன்ற ஓர் அமைப்பு காணப்படுகிறது. அதற்கு மியூகள் என்று பெயர். இது சவ்வு போன்ற அமைப்பாகும். இதன் முக்கிய வேலை கருவிற்கு தேவையான உணவை சேகரித்து அக்கரு வளரத் துணைபுரிவது ஆகும்.

கருமுட்டைப்பை பெண் இனவிருத்தி உறுப்பின் முதன்மைப் பாலியல் உறுப்பாகும். இவை பெண் கரு முட்டையையும், பெண் ஹர்மோன்களாகிய ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோனையும் உருவாக்குகிறது.

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களும், முட்டை வளரச்சிக்குத் தூண்டுதலாக அமைவதோடு அல்லாமல், பெண்ணின் பாலியல் உறுப்புகளாகிய மார்பகம் மற்றும் பெண் பிறப்புறுப்பு வளர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றன. அதோடு மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துவதோடு அச்செயல் சரிவர நடக்கவும் கருவுருவாகவும், குழந்தைப் பெறவும் காரணமாக அமைகின்றன.

கருப்பை ஓர் பேரிக்காய் போன்ற அமைப்புடையது. இதன் சுவர்கள் தசையினால் ஆனது. கருப்பையின் அடிப்பாக திறப்பிற்கு செல்விக்ஸ் என்று பெயர். கருப்பையின் மேற்பகுதிகள் வலது, இடது இருபக்கமும் சினைக் குழயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெண்ணுறுப்பிலும், கருப்பையின் வாய்பகுதியிலும் ஒருவித திரவம் சுரக்கிறது. அவை அப்பகுதிகளை சுத்தப்படுத்துகின்றன. அதோடு அப்பகுதியை ஈரப்பசையுடன் வைத்திருக்கிறது. இத்திரவம் அமிலத் தன்மை உடையது. அது நம் பிறப்புறுப்பை ஏதாவது நுண்கிருமிகள் தாக்கினால் அந்தகிருமிகள் உட்செல்லா வண்ணம் தடுத்து நிறுத்துகின்றது.

பெண் பிறப்புறுப்பின் உள்முனையானது செல்விக்ஸ் என்ற கருப்பையின் வாயோடு இணைந்திருக்கும் அதன் மூன்றின் ஒரு பகுதி வெளியில காணப்படும். இது உணர்வு இழைகளால் ஆனது. இப்பகுதிதான் மகிழ்ச்சிகரமான உணர்வுகளை அதன் வாயிலாக மூளைக்கு எடுத்துச் செல்கிறது.

வெளியுறுப்புகள் அனைத்தும் சேர்ந்து வல்வா அல்லது யோனி என்றழைக்கப்படுகிறது. இரு தொடைகளுக்கு இடையிலுள்ள இப்பகுதி உறுப்பிலுள்ள சிசுத்தாரையானது ஹைமன் என்ற மெல்லிய சவ்வினால் (கன்னிப்படலம்) ஒரு பகுதி மூடப்பட்டிருக்கும்.

கன்னிப்படலம் என்பது சிறுநீர்ப்பாதைக்கும் ஆசன வாய்க்கு இடையிலும் அமைந்திருக்கும். இது எப்போதும் ஈருப்பசையுடன் காணப்படும். அதில் சுரக்கும் ஒருவித திரவத்தின் பெயர் பார்த்தலின் கிளான்சில் ஆகும். இதுபோல் சிறுநீர்ப்பாதைக்கு சற்றுமேல் பெண்ணின் உணர்ச்சிப்படலம் அமைந்துள்ளது. லேபியா மெஜோரா என்ற கொழுப்பு அடுக்கினால் ஆன ஓர் பகுதி இதழ் மாதிரி காணப்படும். அதற்கு வெளியுதடு எனப்படும் இது தடிப்பான மற்றும் பாதுகாப்பான ஓர் வளையமாக அமைந்துள்ளது. அதன் கீழ் முக்கோண வடிவிலான மடிப்பு தசையிலான ஓர் பகுதி உள்ளது. இதற்கு பெரினியம் என்று பெயர். இது பிரசவத்தின்போது விரிந்து குழந்தையை வெளித்தள்ளுகிறது.

 
 


 
 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.