வளாகம் >>

 
கொஞ்சம் சிரியுங்கள்

நேர்முகத் தேர்விற்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு இககட்டான சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என்று ஆசிரியர் ஒரு உதாரணம் சொல்கிறார்.

“ மரம் வெட்டற கம்பெனிக்கு ஒரு பையன் இண்டர்வியூவுக்கு போயிருந்தான். அங்க கேள்வி கேட்டாங்க.
இந்த வேலைல உங்களுக்கு அனுபவம் இருக்கா?
இருக்குங்க.
இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க?
சகாரா பாலைவனத்துல.
அதுவே பாலைவனமாச்சே அங்க ஏது மரம்?
பையன் சட்டுனு சமாளிச்சு ஒரு பதில் சொன்னான்; அதான் எல்லா மரத்தையும் நான் வெட்டிடேனே.

அங்க இருந்தவங்க அசந்து போனாங்க. அவனோட சமாளிப்புத் திறனுக்காகவே உடனே வேலை போட்டுக் கொடுத்துட்டாங்க. அவனுக்குக் கிடச்ச வேலை வெட்டற மரத்தை விக்கற வேலை. அதனால கவலைப் படாம எந்தக் கேள்வியானாலும் உங்களுக்குத் தெரிஞ்ச பதில் சொல்லுங்க. உங்களுக்கான வேலை கட்டாயம் கிடைக்கும்”.

29.12.05 அன்று வந்த ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி.
‘இன்னும் இரண்டு நாட்களில் உங்களை விட்டுப் போகப் போகிறோன்.இனி திரும்ப வரவே மாட்டேன். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.என்னைத் தேட வேண்டாம். நீங்கள் எங்கு தேடினாலும் இனி எப்போதும் உங்களுக்குக் கிடைக்க மாட்டேன் என் பெயர் -2005 ‘ 
 

Copyrights @ 2014 Snehidhi. All Rights Reserved

Designed and Maintained By GNARITUS TECH

.